Search Blog

டிஷ் டிராக் ப்ரண்ட்ஸ் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களையும் தரும் முதன்மை தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்

Aug 9, 2015

ஸ்டார் விஜய் ப்ளஸ்(STAR VIJAY PLUS TV) புதிய தமிழ் தொலைக்காட்சி தமிழகத்தில் விரைவில் உதயம்

நண்பர்களே இந்தியாவின் முன்னனி பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளை ஒளிபரப்பி வரும் நிறுவனமான ஸ்டார் டிவி இந்தியா தமிழ் மொழியில் புதிய பொழுதுபோக்கு தொலைக்காட்சியை விரைவில் தொடங்கப்படவுள்ளது.
தமிழகம் மட்டும் அல்லாது வெளிநாடுகளிலும் மிக பிரபலமடைந்த முன்னனி தமிழ் தொலைக்காட்சியாக ஸ்டார் விஜய் டிவி திகழ்ந்துவருகிறது.தமிழ் மொழியில் மிக பிரபலமடைந்த நிகழ்ச்சிகளை வழங்கி அதிக தமிழ் பார்வையாளர்களை பெற்ற விஜய் டிவி தனது குழுமத்தில் இருந்து விஜய் டிவி ப்ளஸ் என்னும் தொலைக்காட்சியை விரைவில் 
தொடங்கவுள்ளனர்.இப்புதிய தொலைக்காட்சிகான ஒளிபரப்பு அனுமதி மத்திய ஒளிபரப்பு ஆணையத்திடம் இருந்து கிடைக்கும் பட்சத்தில் இவ்வாண்டு இறுதிக்குள் ஒளிபரப்பை தொடங்கலாம் ஸ்டார் விஜய் ப்ளஸ் டிவி.ஸ்டார் டிவி நிறுவனத்தின் மற்ற மாநில மொழி தொலைக்காட்சிகளில் இரு பொழுதுபோக்கு தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தமிழகத்தில் விஜய் தொலைக்காட்சியில் மட்டும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.தமிழகத்தை பொறுத்தமட்டிலும் தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தாலும் அனைத்தும் கட்டண தொலைக்காட்சிகளாகவே தொடங்கப்படுகிறது.ஸ்டார் டிவி நிறுவனத்தின் தென் மாநில தொலைக்காட்சிகளின் உலகளாவிய ஒளிபரப்பு இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது குறிப்பிடத்தக்கது.விஜய் டிவி நிறுவனத்தில் தொடங்கப்படும் முன்றாவது தமிழ் தொலைக்காட்சி இதுவாகும்.

No comments:

Post a Comment