Search Blog

டிஷ் டிராக் ப்ரண்ட்ஸ் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களையும் தரும் முதன்மை தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்

Sep 25, 2015

பெப்பர் டிவி செயற்கைகோள் ஒளிபரப்பு புதிதாக இன்டல்சாட்17 செயற்கைகோளுக்கு மாற்றம்

நண்பர்களே தமிழகத்தின் முன்னனி பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சியான பெப்பர் டிவி செயற்கைகோள் ஒளிபரப்பு தமிழ் தொலைக்காட்சிகள் சங்கமிக்கும் செயற்கைகோளான இன்டல்சாட்17க்கு மாற்றம்செய்யப்பட்டுள்ளது. பெப்பர் டிவியின் முதல் தொடக்க செயற்கைகோள் ஒளிபரப்பு இந்தியாவின் பார்த்தி டெலிஸ்பாட் நிறுவனத்தின் 
ஒளிபரப்பு முனையத்தின் முலமாக இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கப்பட்டு தற்சமய காலம் வரை ஒளிபரப்பாகி வந்தது.பெப்பர் டிவியின் நிகழ்ச்சிகள் என்று பார்த்தால் திரைப்படம் மற்றும் கேம் ஷோ போன்ற நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.பார்த்தி டெலிஸ்பாட் நிறுவனம் இன்டல்சாட்17 செயற்கைகோளிலும் தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதற்கான அலைவரிசையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள புதிய அலைவரிசை 
சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் அதற்கு மேற்பட்ட சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு MPEG4/DVB S2 தொழில்நுட்ப செட்டாப் பாக்ஸில் மட்டுமே கிடைக்கிறது.மேலும் இப்புதிய அலைவரிசையில் தமிழ் மற்றும் பல மொழி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பை தொடங்கலாம்.பெப்பர் டிவி ஒளிபரப்பு இலவச இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.

அலைவரிசை விபரங்கள்
Satellite                  Intelsat17@66.0E(C-Band)
Freq Rate               3933
Symbol Rate          18333
Polar                       Horizontal
Modulation             Mpeg4/Dvb s2
Mode                      Fta

No comments:

Post a Comment